"ஷூட்டிங்கில் ரஜினி எல்லோரையும் கலாய்ப்பார்" -பிரபல நடிகர் பேட்டி

nagarjuna web series

டைரக்டர் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிகர் நாகர்ஜுனா நடித்துள்ளார் .இவர் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் ரஜினி பற்றி சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்து கொண்டார் .அதாவது கூலி பட ஷூட்டிங்கில் மற்றவர்கள் நடிக்கும்போது அமைதியாக இருப்பார் .ஆனால் சண்டை காட்சிகளின் போது அனைவரையும் கேலியும் கிண்டலுமாக கலாய்த்து கொண்டேயிருப்பார் என்று கூறினார் .அவர் மேலும் கூறுகையைல் தன்னால் ரஜினிபோல் அமைதியாக இருக்க முடியாது என்றும் தான் பேசிக்கொண்டேயிருப்பேன் என்றும் கூறினார் 
இந்நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் .இப்படம் தனுஷின் 51வது படமாகும்.ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகாநடிக்கிறார் 
 இந்த படத்திலும்  நாகர்ஜுனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .தனுஷ் பற்றி அவர் ,:"தனுஷ் காட்சி படப்பிடிப்பின் போது அதன் இடைப்பட்ட இடைவேளையில் யாரிடமும் பேசமாட்டார். அவர் ஒரு ஓரமாக சென்று உட்கார்ந்து விடுவார். அடுத்து நடிக்க வேண்டிய காட்சி பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பர் என்று கூறினார் .

Share this story