"கூலியில் ரஜினிக்கு இணையான கேரக்டர் எனக்கு" -எந்த நடிகர் இப்படி பேசினார் தெரியுமா ?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் கூலி படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது .இந்த படம் பற்றி மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது .இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது .அப்போது ரஜினி பேச்சு மக்களிடையே வரவேற்பை பெற்றது .
அந்த நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜூனா , எனக்கு லோகேஷின் கைதி மற்றும் விக்ரம் திரைப்படம் மிகவும் பிடிக்கும். அவரது திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையாக இருக்கும். குறிப்பாக விக்ரம் படத்தில் வில்லன்களுக்கு சரிசமமான கதாபாத்திரங்களை கொடுத்திருப்பார். கூலி படமும் அப்படிதான். ஹீரோவுக்கு இணையான ரோலை வில்லனுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சென்னதும் என்ன கேட்ட முதல் கேள்வி, இதற்கு ரஜினிகாந்த் சார் ஒகே சொல்லிட்டாங்களா? என்பதுதான். ஏனென்றால், என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலுவாக, ரஜினி சாருக்கு இணையான ஒரு கதாபாத்திரமாக இருந்தது. அதனால்தான் ரஜினி சார், இதற்கு ஓகே சொல்லிட்டாங்களானு கேட்டேன் என நடிகர் நாகார்ஜூனா தெரிவித்தார்.

