நாகார்ஜூனா நடிக்கும் நூறாவது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?

nagarjuna
நடிகர் நாகர்ஜுனா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் .இவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன .இவர் அடுத்து நூறாவது படமாக நடிக்கும் படத்தின் அப்டேட் பற்றி நாம் காணலாம் 
சமீபத்தில் வெளியான 'குபேரா மற்றும் கூலி' படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நாகார்ஜுனா, நித்தம் ஒரு வானம், ஆகாசம் போன்ற படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் தனது 100-வது படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக கிங்100 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் தபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக அவர் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும், ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தபுவைத் தவிர, மேலும் இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் மிகவும் கொண்டாடப்படும் திரை ஜோடிகளில் நாகார்ஜுனா மற்றும் தபுவும் ஒருவர்.
"நின்னே பெல்லடுதா" (1996) படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்தது. இவர்களுக்கு தற்போதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Share this story