மறைந்த நடிகர் கிரேஸி மோகனின் மனைவி, 'நளினி கிரேஸி மோகன்' காலமானார்- துக்கம் பகிர்ந்த கமல்.

photo

நடிகரும், வசன கர்த்தாவுமான மறைந்த கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார்.

photo

நளினி கிரேஸிமோகன் காலமான  தகவலை நடிகர் கமல்ஹாசன் தனது ட்வீட் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார்இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் நளினி கிரேஸி மோகன் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

photo

கிரேஸி மோகன்  கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பால் சென்னையில்  காலமானார். மிகச்சிறந்த  நடிகரான இவர் அடுக்குமொழி வசனம், எதுகை மோனை வசனம் என  வசனங்கள் எழுதுவதில் கைத்தேர்ந்தவர். அதிலும் இவர் படங்களுக்கு எழுதிய வசனங்கள் இன்றுவரை ஹிட் லிஸ்டில் உள்ளது. இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாக இன்றுவரை உள்ளது. அவரது கடைசி நொடிகளில் ஒரு சகோதரனை போல கமல்ஹாசன் இவரை மருத்துவமனையில்  கவனித்துகொண்டார். இன்று அவரது  மனைவி காலமானார், இதனை தொடர்ந்து நெருக்கமான சினிமாதுறையினர் பலரும் துக்கம் பகிந்து  வருகின்றனர்.

Share this story