மன அழுத்தத்திலிருந்து விடுபட துளசி மாலையை வைத்து தியானம் செய்த நடிகை -யார் தெரியுமா ?
குஜராத் மாநிலத்தை சேர்ந்த நமீதா தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவராக இருந்தார். மச்சான்ஸ் என்று அவர் சொன்னால் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். தொழில் அதிபர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்ட நமீதாவுக்கு இரட்டை மகன்கள் இருக்கிறார்கள். சுமார் 6 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார் நமீதா. ‘‘ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை, உடல் பருமனை குறைக்க முடியவில்லை. கடும் மன அழுத்தத்தில் இருந்தேன். தற்கொலை செய்யும் எண்ணமும் இருந்தது.
அப்போதுதான் நடிகை பிரியா ராமனை சந்தித்தேன். எனக்காக துளசி மாலை வாங்கி வந்து கொடுத்தார். ‘இது தான் மருந்தா, விளையாடுகிறீர்களா அக்கா’ என நான் கேட்டேன். ‘இந்த துளசி மாலையை வைத்து தியானம் செய்யுங்கள். இது தான் உங்களுக்கான மருந்து’ என்றார் பிரியா ராமன். மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தால் போதும் என்கிற நிலையில் இருந்த நிலையில் அக்கா வந்தார். அன்று காலை முதல் மாலை வரை கோயிலில் தியானம் செய்தேன். அக்காவும் என்னுடன் இருந்தார். நான் தினமும் தியானம் செய்ய ஆரம்பித்தேன். எல்லாம் முடிந்துவிட்டது என்று இருந்த நிலையில் எல்லாம் மாறியது. கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’’ என்றார் நமீதா.

