நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் `ஓகே சொல்லிட்டா' வீடியோ பாடல் வெளியானது

nanban oruvan vandha piragu

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமான முகமானார் அனந்த் . இந்நிலையில் ஆனந்த் தற்பொழுது இயக்குனர் அவதாரத்தை எடுத்துள்ளார். தற்பொழுது அனந்த் `நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்கி மசாலா பாப்க்கார்ன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆனந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருடன் பவானி ஸ்ரீ, ஆர் ஜே விஜய், மோனிகா, யூடியூபர் இர்ஃபான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளனர். அதில் ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ள `ஓகே சொல்லிட்டா' என்ற பாடலின் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலின் காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. இப்பாடலின் வரிகளை ஆர்ஜே விஜய் எழுதியுள்ளார்.

Share this story