வெங்கட் பிரபு தயாரிப்பில் ‘நண்பன் ஒருவன் வந்தபிறகு’.. சிம்பு வெளியிட்ட ஃப்ர்ஸ்ட் லுக் !

NanbanOruvanVanthaPiragu

வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நண்பன் ஒருவன் வந்தபிறகு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு. பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய அவர், தற்போது விஜய் 68வது படத்தை இயக்கவுள்ளார். தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அவர், ஏற்கனவே ஆர்கே நகர், கசடதபற உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். 

venkat prabhu

அந்த வகையில் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நண்பன் ஒருவன் வந்தபிறகு’. சமீபத்தில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. ‘மீசையை முறுக்கு’, ‘மாணவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஆனந்த் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 

இந்த படத்தில் ஆனந்த், குமரவேல், லீலா, விஷாலினி, பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், வினோத், KPY பாலா, இர்பான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எச். காசிஃப் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு வெளியிட்ட இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

 

 

Share this story