‘நந்தன்’ என்னை கண் கலங்க வைத்தது : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

nandhan

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘நந்தன்’ திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நந்தன்’. இப்படம் இன்று (செப்.20) தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள நந்தன் திரைப்படம் ஊடகத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி நந்தன் திரைப்படம் அழுத்தமாக பேசியுள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சசிகுமார், பாலாஜி சக்திவேல் ஆகியோரது நடிப்பும் பாராட்டைப் பெற்று வருகிறது. இந்நிலையில், நந்தன் திரைப்படத்தை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

null



அந்த வீடியோவில் பேசிய சிவகார்த்திகேயன், “எனது அன்பு அண்ணன்கள் சசிகுமார், இரா.சரவணன் இணைந்து வழங்கியுள்ள படைப்பு நந்தன். நடிகர் சசிகுமாரின் வித்தியாசமான முயற்சி என்று நினைத்து இந்த படத்தை பார்த்தேன். இந்த படத்தின் முதல் காட்சியிலேயே இயக்குநர் பயங்கரமாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார் என தோன்றியது.

மேலும், நந்தன் படத்தில் மிகவும் எதார்த்தமாக, உண்மைக்கு நெருக்கமாக சசிகுமார் நடித்திருந்தார். இந்த படத்தைப் பார்க்கும் போது பல இடங்களில் சிரித்தேன், யோசித்தேன், கண் கலங்கினேன். கடைசியாக வேகமாக கை தட்டினேன். இதற்கு காரணம் இரா. சரவணின் எழுத்தும், இயக்கமும் தான்” என கூறியுள்ளார்.

Share this story