“இருய்யா... வந்து தொலையிறேன்” - கடுப்பான வினோத்

H vinoth

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் நந்தன். இப்படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் அ.வினோத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் இரா.சரவணன் பேசுகையில் படம் குறித்தும் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் குறித்தும் பேசினார். அப்போது வினோத் குறித்து பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

அவர் பேசியதாவது, “இந்த சம்பவத்தை சொல்லலாம் என நினைக்கிறேன். ஒரு மூணு மாசத்துக்கு முன்பு, ‘தயவு செஞ்சு என்னை எந்த படத்துக்கும் கூப்பிடாத, நான் வேறொரு படம் கமிட்டாகி போய்கிட்டு இருக்கேன், உன் படத்தை பார்த்தேன் நல்லாருக்கு’ எனச் சொன்னார். இருந்தாலும் வழக்கமா நான் அவரிடம் தான் போய் நிற்பேன் என தெரியும். ஃபோன் அடிச்சேன். நீங்க வந்தால் ஜிப்ரான் சார் சந்தோசப்படுவார் என ஜிப்ரான் சார் மீது பலி போட்டுவிட்டேன். அப்புறம் நீங்க வரமுடியாது என முன்னாடியே சொன்னீங்க, இருந்தாலும்...அப்படின்னு இழுத்துக் கொண்டே இருந்தேன். அதை கேட்டுக் கொண்டிருந்த வினோத், ‘யோவ்... இருய்யா வந்து தொலையிறேன்’ என சொன்னார். அடப்பாவிகளா ஒரு நிகழ்ச்சிக்கு வருவதை இப்படியா சொல்ல வேண்டும் என சிரித்துக் கொண்டேன்” என்றார்.தொடர்ந்து பேசிய அவர், “வினோத் மாதிரியான மனிதர்களை நான் சம்பாதித்திருக்கிறேன் என்பது படத்திற்கும் மட்டுமில்லை என் வாழ்க்கைகே பெருமையாக இருந்தது” என்றார். 

Share this story

News Hub