பல்லவர்களின் வரலாற்றை பேசும் ‘நந்திவர்மன்’ டிரைலர் இதோ!

photo

சுரேஷ் ரவி நடிப்பில் தயாராகியுள்ள நந்திவர்மன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஏகே பிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் ஜிவி பொருமாள் வரதன் இயக்கியுள்ள படம் நந்திவர்மன். இந்த படத்தில் சுரேஷ் ரவி, ஆஷா கௌடா, நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், முல்லை கோதண்டம் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜெரால்ட் ஃபெர்லிக்ஸ் இசையமைத்துள்ளார். சோழர்களின் வரலாறு, பாண்டியர்களின் வரலாறு வரிசையில் தற்போது பல்லவர்களின் வரலாறு படமாகியுள்ளது. பல்லவர்களின் வரலாற்றை தற்காலத்துக்கு ஏற்றார்ப்போல பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ஊருக்குள் புதையுண்டு இருக்கும் பல்லவர் கோயில், அதனை மீட்க நினைக்கும் அரசு, கோயிலை சுற்றி நடக்கும் மர்மம் இவையே கதைகரு.

Share this story