நானி நடித்துள்ள 'ஹிட் 3' முதல் நாள் வசூல் விவரம்...!

நானி நடித்துள்ள 'ஹிட் 3' படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.
மே 1ம் தேதியான நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெளியாகின. தமிழில் 'ரெட்ரோ', தெலுங்கில் 'ஹிட் 3', ஹிந்தியில் 'ரெய்டு 2' ஆகிய அந்தப் படங்களுக்குள் ஆங்கிலப் பெயர் தலைப்பு என்பது ஒரு ஒற்றுமையாக இருந்தது.
மேற்கண்ட படங்களில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளிவந்துள்ள 'ஹிட் 3' படத்தின் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 'ஹிட் 3' படம் அனைத்து மொழிகளிலும் உலக அளவில் 43 கோடி வசூலித்துள்ளது. நேற்றைய வெளியீடுகளில் இந்தப் படத்தின் வசூல்தான் இந்தியப் படங்களில் மிக அதிகம் என கூறப்படுகிறது.
நானி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'தசரா' படம் முதல் நாளில் 38 கோடி வசூலித்தது அவரது படங்களின் சாதனையாக இருந்தது. அதை 'ஹிட் 3' படம் முறியடித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்தப் படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.