நானி நடித்த ஹிட் 3 ஓடிடியில் ரிலீஸ்...!

HIt

நானி நடிப்பில் வெளியான ஹிட் 3 திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

சைலேஜ் கொவனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படம் மே.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வால் போஸ்டர் சினிமா, அனானிமஸ் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.HIT 3
 
ஹிட் படத்தின் முதலிரண்டு பாகங்கள் அபார வெற்றி பெற்ற நிலையில், மூன்றாம் பாகமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகும் வெற்றிப் படமாகவே அமைந்தது. இந்த நிலையில், ஹிட் - 3 படம் இன்று( மே 29 ) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Share this story