தமிழில் படம் நடிக்கும் நானி... டான் இயக்குநருடன் கூட்டணி...

தமிழில் படம் நடிக்கும் நானி... டான் இயக்குநருடன் கூட்டணி...

ஷியாம் சிங்கா ராய், தசரா ஆகிய படங்களை தொடர்ந்து ஹாய் நானா என்ற படத்தில் நானி நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். இதையடுத்து, தமிழ் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் அவர் புதிய படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. 

தமிழில் படம் நடிக்கும் நானி... டான் இயக்குநருடன் கூட்டணி...

இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி தெலுங்கு நடிகர் நானியிடம் புதிய படத்திற்காக கதை கூறியுள்ளதாகவும் அதில் நடிக்க நானி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. ஹாய் நான்னா படத்தைத் தொடர்ந்து நானி தமிழில் சிபியுடன் இணைந்து இப்புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story