நானி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு...!

naani

தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார்.தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படங்கள் அமோக வெற்றியைப் பெற்றன. அதன் பின்னர் வெளியான 'தசரா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.அதனை தொடர்ந்து நானியின் 30வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார்.31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்தார். டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 'சரிபோத சனிவாரம்' (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி வெளியானது.

இப்படத்தில் இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 'சூர்யாவின் சனிக்கிழமை' ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்தது.தற்போது இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக 'நானிஒடேலா - 2' எனப் பெயரிடப்பட்டிருந்தது. இப்போது இந்தப் படத்திற்கு 'தி பாரடைஸ்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே நானியின் ஜெர்ஸி, கேங்ஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.நானியின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story