நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' படத்தின் அப்டேட்...!

நானியின் 33-வது படமான 'தி பாரடைஸ்' படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் வெளியான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா', 'ஹாய் நான்னா' , சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
Tomorrow.@odela_srikanth @anirudhofficial
— Nani (@NameisNani) March 2, 2025
These two will deliver an expectation and my gut says rest will be ……. :) pic.twitter.com/ewIVvom4Ue
இந்நிலையில், தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். 'தி பாரடைஸ்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தினை எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே நானியின் ஜெர்ஸி, கேங்ஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். நானியின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்ப்டடத்த்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.