த்ரில்லரில் உறைய வைக்கும் ‘வெப்’.. நட்டி படத்தின் டிரெய்லர் வெளியீடு !

த்ரில்லரில் உறைய வைக்கும் ‘வெப்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நட்டி, ‘வெப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அனன்யா மணி, சுப ப்ரியா மலர், சாஸ்திரி பாலா, ப்ரீத்தி ஆகிய 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் பிளாக் ஷீப் நந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹாரூன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரித்துள்ளார். கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நட்ராஜ் இந்தப் படத்தில் பெண்களை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார். ஷில்பா மஞ்சுநாத் தன் நண்பர்களுடன் நட்டியிடம் மாட்டிக்கொள்கிறார். பின்னர் போராடி எப்படி அங்கிருந்து தப்பி செல்கிறார் என்பது தான் படத்தின் கதை.
இப்படம் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.