ஒரு வழியாக வெளியாகும் நட்டியின் 'வெப்'‌‌... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

web

நட்டியின் நடிப்பில் உருவாகியுள்ள 'வெப்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நட்டி, ‘வெப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஹாரூன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரித்துள்ளார். இப்படத்தில் அனன்யா மணி, சுப ப்ரியா மலர், சாஸ்திரி பாலா, ப்ரீத்தி ஆகிய 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

web

இவர்களுடன் பிளாக் ஷீப் நந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  கார்த்திக் ராஜா இசையில் இப்படம் உருவாகியுள்ளது. நட்ராஜ் இந்தப் படத்தில் பெண்களை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார். ஷில்பா மஞ்சுநாத் தன் நண்பர்களுடன் நட்டியிடம் மாட்டிக்கொள்கிறார். பின்னர் போராடி எப்படி அங்கிருந்து தப்பி செல்கிறார் என்பது தான் படத்தின் கதை. 

நீண்ட நாட்களாக இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு வழியாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Share this story