‘நாயகன் மீண்டும் வர……’- தொடரும் கமலின் ரீ ரிலீஸ் படங்கள்.

photo

கமல் ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நாயகன்’ படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

photo

முக்தா சீனிவாசன் தயாரிப்பில் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான படம் ‘நாயகன்’ . மணிரத்னம் இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் கமலுடன் இணைந்து, சரண்யா, ஜனகராஜ், நாசர், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் என் பலர் நடித்திருந்தனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பி.சி ஸ்ரீராம் ஒளிபதிவு செய்திருந்தார். இந்த படத்திற்காக நடிகர் கமல் ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது, ஓளிபதிவாளர் பி.சி ஸ்ரீராம், கலை இயக்குநர் தரணி உள்ளிட்டோருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு பெற்ற ‘நாயகன்’ படம் மீண்டும் திரையிடப்பட உள்ளது. வரும் நவம்பர் 3ஆம் தேதி படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து போஸ்டரும் வெளியாகியுள்ளது. படம் தமிழகம். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியாகவுள்ளது.

Share this story