விஜயதசமி கொண்டாடிய நயன்- விக்கி.. வீடியோ
1728814554000

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி விஜயதசமி கொண்டாடியுள்ளனர். இதையொட்டி, நயன்தாரா தனது எக்ஸ் தள பதிவில், அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதவிர, கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் தனது பதிவில் இணைத்துள்ளார். இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Happy Vijayadashami Everyone😇 pic.twitter.com/pQrMFavo0u
— Nayanthara✨ (@NayantharaU) October 12, 2024