'நயன் விக்கி'யின் பொங்கல் கொண்டாட்டம் – அழகானகுடும்பத்துடன் கியூட் வீடியோ.

photo

காதலர் விக்கியை கடந்த ஆண்டு  ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துக்கொண்டார் நயன். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர். தொடர்ந்து வாடகைதாய் மூலமாக இரட்டை குழந்தைக்கு பெற்றோரான இந்த தம்பதி தங்கள் குழந்தைகளுக்கு உயிர், உலகம் என பெயரிட்டு ரசிகர்களுக்கு அறிமுகபடுத்தினர்.

photo

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளுடன் அழகிய வீடியோ வெளியிட்டு வாழ்த்துகளை பகிர்ந்தனர், அதேபோல  கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் இரட்டைக்குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை விக்கி-நயன் ஜோடி பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

photo

இந்நிலையில் தற்போது மீண்டும் தங்களது குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ்சிவன். பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக அழாகான ஒரு புகைப்படத்தை வைத்து ‘பொங்கலோ பொங்கல்’ பாடலை இணைத்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குழந்தைகளின் முகத்தை இந்த முறையும் மறைத்து எமோஜியை பதிவிட்டுள்ளனர் இந்த தம்பதி.

Share this story