இரட்டை குழந்தைகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்திய ‘நயன்-விக்கி’ தம்பதி- வைரலாகும் வீடியோ.

photo

கோலிவுட்டின் ஸ்டார் தமப்திகளாக வலம்வரும் நயன் விக்கி தம்பதி, எது செய்தாலும் அது வைரலாக பரவி விடும். அந்தவகையில் தற்போது தங்கள் இரட்டை குழந்தைகளுடம் விமான நிலையத்திற்குள்  இருவரும்  செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, ஐயா படத்தின் மூலமாக அறிமுகமானார்.  தொடர்ந்து ரஜினிகாந்துடன் சந்திரமுகி,  அஜித்தின் பில்லா, தனுஷுடன் யாரடிநீ மோகினி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். மற்ற நடிகைகளை போல நான்கு, ஐந்து ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்துகொள்வார் என பலரும் கூறியநிலையில் சினிமாவில்  எதிர்நீச்சல் படத்தில் குத்தாட்டம் போட்டு தனது செகண்ட் இன்னிங்க்சை தொடங்கி வைத்தார். அடுத்தடுத்து ராஜாராணி முதல் கனெக்ட் வரை பல வெற்றிபடங்களையும், பெண்மைய்ய திரைப்படங்களையும் கொடுத்தார்.

photo

இப்படி கெரியரில் கோலோச்சிய நயன்தாரா,தனது சொந்த வாழ்கையிலும் பல தடைகளை கடந்து தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வாடகைதாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தை பிறந்தனர். தற்போது வரை இவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்யாமல் வைத்துள்ளார்கள் இந்த தம்பதி. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் மும்பை விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் வருகை தந்த வீடியோ காட்சிகள் ,புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.நயன் ஷாருக்கான் படமான ஜவான் படப்பிற்காக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

photo


 

Share this story