குட் நியூஸ்: மீண்டும் நயன், யோகிபாபு கூட்டணி -டைரக்டர் யார் தெரியுமா?

photo

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா மீண்டும் யோகிபாபு உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

2018ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு முதன்மை கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர். அனிரூத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அதிலும் கல்யாண வயசு பாடல் மாஸ் ஹிட் என்றே சொல்லலாம். இந்த நிலையில் மீண்டும் நயன்- யோகி இணைய போவதாக சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

photo

அந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்கி இயக்க போவதாகவும். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவும், யோகி பாபுவும் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கயுள்ளனர். இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாம், இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Share this story