"பியூட்டியை கொஞ்சம் கூட்டிய நயன்தாரா"

nayanthara

பிரபல நடிகை நயன்தாரா இப்பொது வெளியிட்டுள்ள ஒரு புதிய Video இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "நானும் ரவுடி தான்". இந்த திரைப்படத்தின் மூலம் தான் பிரபல நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாகவும் மாறியது. இந்த சூழலில் கடந்த 2022ம் ஆண்டு இந்த இரு செலிபிரிட்டிகளும் திருமணம் செய்து கொண்டனர். 

அவர்களுடைய திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலம் "உயிர்" மற்றும் "உலகு" என்கின்ற இரண்டு ஆண் குழந்தைகளை அவர்கள் பெற்றெடுத்துக் கொண்டனர். இதில் சில சர்ச்சைகள் எழுந்தாலும், இப்போது ஒரு குடும்பமாக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 18ம் தேதி விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை துபாய் நாட்டில் பல முக்கிய நண்பர்களோடு இணைந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தனது படங்களில் பிஸியாக நடித்து வரும் அதே நேரம், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களோடு அதிக அளவிலான நேரத்தை செலவிட்டு வரும் நயன்தாரா  தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தான் காது குத்திக் கொள்கின்றார். காது குத்தும் கடைக்குச் செல்லும் நயன், அங்கு தனக்குப் பிடித்த தோடை தேர்வு செய்கின்றார். அதன் பின்னர் அங்கிருக்கும் ஊழியர்கள், நயனுகு அந்த தோடை குத்தி விடுகின்றனர். இப்படியான நிலையில், நயனுக்கு காதில் இருந்து ரத்தம் வருகின்றது. அப்போது, விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலைப் பாடி க்யூட்டான ரியாக்‌ஷன் கொடுக்கின்றார். நயன் தனது வலது காதில் இரண்டு தோடுகள் குத்தியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். மேலும் அந்த வீடியோவுக்கு நயன் காதுமா என கேப்ஷன் இட்டுள்ளார். காதுமா என்பது நானும் ரவுடிதான் படத்தில் நயன் ஏற்று நடித்த காதம்பரி கதாபாத்திரத்தின் செல்லப்பெயர்.
 

Share this story