"இப்படம் நமக்கு என்ன தேவை என்பதை சொல்கிறது" -நயன்தாரா பாராட்டிய படம் எது தெரியுமா ?
காதல் திருமணம் செய்துகொண்ட கோகுல் (சிவா), குளோரி (கிரேஸ் ஆண்டனி) ஆகியோரின் பத்து வயது மகன் அன்பு (மிதுன் ரியான்). இவர்களுக்குள் நடக்கும் குடும்ப கதைதான் பறந்து போ படம் .சிக்கல்களுக்கான தீர்வுகளைச் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்கள், கிளைக்கதைகளின் உதவியோடு விவாதிக்கிறது இப்படத்தின் திரைக்கதை.
பரபரப்பு, திருப்பங்கள் இல்லாமல், நேர்க்கோட்டில் நிதானமாகப் பயணிக்கும் திரைக்கதை, காமெடி, எமோஷன் என மாறி, மாறி வந்தாலும் அழுத்தமாகவே நகர்கிறது.
இந்த பறந்து போ படம் பார்த்துவிட்டு அந்த படத்தை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை நயன் தாரா ,
"இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால், குழந்தைகளை கூட்டிக்கொண்டு மலை ஏறுங்கள்.. அல்லது ஏரியில் அவர்களுடன் நீந்தி விளையாடுங்கள்.. அல்லது அவர்களை ராம் சாரின் ''பறந்து போ'' படத்திற்கு அழைத்துச் சென்று காணுங்கள்.
வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை , எதை இழக்கிறோம் என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது. நான் பார்த்த மிக இனிமையான படங்களில் இதுவும் ஒன்று.
ராம் சார் நீங்கள் பெஸ்ட் இயக்குனர். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி என ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்திருக்கிறார

