‘Nayanthara Beyond the Fairy Tale’ – ஆவணப்படத்தின் ட்ரெய்லர் நாளை ரிலீஸ் !

nayan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. ரசிகர்கள் இவரை அன்பாக லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்து வருகின்றனர். ஜவான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக இந்தி திரையுலகில் காலடி தடத்தை பதித்தார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என இரு மகன்கள் உள்ளன. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுற்றுலா பண்டிகை நாட்களில் மற்றும் ரோமேண்டிக் டேட் செல்லும் போது அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் அவரது வாழ்க்கை குறித்து ஆவண படத்தை நெட்பிளிக்ஸ் உருவாக்கியுள்ளது. இதற்கு நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் என தலைப்பிட்டுள்ளனர். இந்த ஆவண திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. திரைப்படம் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நயன்தாரா தற்பொழுது டெஸ்ட் படத்தில்  நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

Share this story