வௌ்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலவச நாப்கின்கள் வழங்கி நயன்தாரா உதவி
மிச்ஜாம் புயல் மற்றும் இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வகையிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Once again #nayanthara shows why she's #ladysuperstar , great gesture from her and her brand femi9 during this situation which helps everyone's needs👏 #ChennaiFloods2023 pic.twitter.com/viEWJeGO5c
— Ramesh Bala (@rameshlaus) December 7, 2023
இந்நிலையில், வேளச்சேரி பகுதியில் நயன்தாரா சார்பில் நிவாரண உதவிகள் செய்யப்பட்டன. நயன்தாராவுக்குச் சொந்தமான ஃபெமி9 கம்பெனி நாப்கின்கள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இதையடுத்து, பெண்கள் பலரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.