தென்னிந்திய சினிமாவில், அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா ?

Signed and sealed: Nayanthara’s “Mookuthu Amman” slated for a Diwali release on a popular OTT platform
தென்னிந்திய சினிமாவில், ஹீரோக்களுக்கு இணையாக அதிக சம்பளம் வாங்கும் நடிகை பற்றி நாம் இப்பதிவில் காணலாம் .
நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி, மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், மலையாளத்தில் மம்மூட்டியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். டாக்ஸிக் பான் இந்தியா படத்தில் யஷ் சகோதரியாக நடிக்கிறார். தொடர்ந்து அனைத்து மொழி படங்களிலும் நடிக்கும் நயன்தாரா, ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், தென்னிந்திய சினிமாவில், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், 50 வினாடிகள் ஒளிபரப்பாகும் விளம்பரத்தில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இதை நயன்தாரா தரப்பு மறுத்துள்ளது. எந்த விளம்பரத்துக்கும் அதுபோல் சம்பளம் வாங்கவில்லை. தகுதிக்கேற்பவே சம்பளம் பெற்றுள்ளதாக அவரது தரப்பினர் கூறியுள்ளனர்.

Share this story