நயன்தாராவின் 81-ஆவது பட அறிவிப்பு-பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சூப்பர் தகவல்.

photo

நடிகை நயன்தாரா இன்று தனது 38-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவிற்காக உருக்கமான  பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

photo

இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகவுள்ள  81-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்', 'காக்கிச்சட்டை', தனுஷ் நடித்த 'கொடி' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய படங்களை இயக்கிய, இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

photo

படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது, அதில் யானை உள்ளது, அதை யரோ தொடுவதுபோல காட்சி இடம் பெற்றுள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

photo

 

Share this story