நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’… ஓடிடி-யில் ரிலீஸ்… உறுதியான தகவல்!
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் ஓடிடி-யில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
ஊரடங்கால் தியேட்டர்கள் பல மாதங்களாக இயங்காமல் இருக்கும் சமயத்தைப் பயன்படுத்தி ஓடிடி தளங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களை ஓடிடி-யில் விற்க முன்வந்துள்ளனர். சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடி-யில் வெளியாவதாக வந்த அறிவிப்பு கோலிவுட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களும் ஓடிடி-களில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டெர்னர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளனர். நயன்தாரா இந்தப் படத்தின் அம்மனாக நடித்துள்ளார். ஆர்ஜே பாலாஜியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது மூக்குத்தி அம்மன் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமைகளை விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் கமெண்ட்ரி செய்து வந்த ஆர்ஜே பாலாஜி தற்போது படம் வியாபாரம் குறித்த வேலைகளுக்காக 20 நாள்கள் கமெண்ட்ரி செய்வதிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.