கேஜிஎப் ஹீரோவுக்கு நயன்தாரா அக்காவா? என்ன காரணம் ?
நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், தனது லாங் ஹேரை ஷார்ட்டாக நறுக்கி செம ஸ்டைலாக புதிய லுக்கில் நடிகர் யஷ் விமானத்தில் பறந்து சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கின.பாலிவுட் நடிகை கரீனா கபூர் இந்த படத்தில் யஷ் அக்காவாக நடிப்பதாக பேச்சுகள் அடிபட்டன. அதன் பின்னர், நயன்தாராவிடம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அக்காவாக நடிக்க 20 கோடி ரூபாய் கேட்கிறார் நயன்தாரா என்றும் அதனால், அவரை நீக்கி விட்டு தபுவிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தற்போது டாக்ஸிக் படத்தில் சத்தமே இல்லாமல் நயன்தாரா நடித்து வருகிறார் என்கின்றனர்.
பெங்களூரில் அதற்கான படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்று வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
நயன்தாரா அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தில் யஷ்ஷுக்கு ஜோடியாக 2 பாலிவுட் நடிகைகள் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கியாரா அத்வானி டாக்ஸிக் படத்தில் யஷ் ஜோடியாக நடித்து வருகிறாராம். மேலும், இந்தி நடிகை தாரா சுதாரியாவும் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறுகின்றனர்.
பெங்களூரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் 20 முதல் 30 பெண்கள் ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்க அவர்களை நடிகர் யஷ் காப்பாற்றுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். கேஜிஎஃப் 2 வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.