நயன்தாராவின் ‘அன்னபூரணி’ பட முதல் நாள் கலெக்ஷன்!
1701493896254
நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான அன்னபூரணி படம் முதல் நாளில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக வெளியான அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்க, ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படம் முதல் நாளில் ரூபாய்: 60 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளது. தொடர்ந்து படத்தில் வசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

