'அன்னபூரணி'யாக அசத்தும் நயன்தாரா- டிரைலர் இதோ!
1701160984297
நடிகை நயன்தாரா நடிப்பில் தயாராகியுள்ள அன்னபூரணி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அன்னபூரணி’. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஐயர் வீட்டு பெண்ணான நயன்தாரா பல தடைகளை கடந்து அசைவம் சமைக்கும் சமையல் கலைஞரானார் என்பதே கதை. டிரைலரில் நயன்தாரா பேசும் வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.