'நயன்- விக்கி' இரட்டை ஆண் 'குழந்தைகள்' - பெயருக்கான காரணம் இதுதான்.

photo

நயன்-விக்கி தம்பதியரின் இரட்டை ஆண் குழந்தைகளின் பெயர்கள்  நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அப்பெயருக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவலை விக்கி வெளியிட்டுள்ளார்.

photo

லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம்  திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து. இந்த தம்பதி திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆனதை அறிவித்தனர். இந்த தகவலால் பல சர்சைகள் பூதாகரமாக கிளம்பியது. தொடர்ந்து வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றதை அறிவித்து  சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

photo

தொடர்ந்து  கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் என பல பண்டிகைகளுக்கு தங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஆனால் குழந்தைகளின் முகத்தை காட்டியதே இல்லை. எமோஜிகளை வைத்து மறைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று ஒரளவிற்கு தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் பெயரான உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்வீக் N சிவன்  என்பதை அறிவித்தனர்.

photo

அதில் என்பது உலகத்தில் தலைசிறந்த தாயான நயன்தாவின் முதல் எழுத்து. அதுமட்டுமலாமல் குழந்தைகளின் இந்த பெயர்கள் தெய்வத்தை குறிக்கிறதாம். கடவுள் நம்பிக்கை அதிகமுள்ள நயன் விக்கி தம்பதி தெய்வத்தின் ஆசி வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு இப்பெயரை சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story