இவ்வளவா!…- ‘அன்னபூரணி’ படத்துக்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

photo

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக தயாராகியுள்ள அன்னபூரணி படத்துக்காக அவர் எவ்வளவு தொகையை சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம்  ‘அன்னபூரணி’. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமையல் கலைஞராகவேண்டும் என்ற ஆசையில் அதற்காக போராடும் நயன்தாராவின் கதை தான் அன்னபூரணி. இந்த படத்தில் அவர் நடிக்க சுமார் ரூ.10 கோடி சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகி பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

 

 

Share this story