சகோதரரின் ஆலோசனையை கேட்கும் நயன்தாரா -என்ன செய்கிறார் தெரியுமா ?

nayanthara
நயன்தாரா பிரபலமான நடிகையாகி, சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகும் அவரது பெற்றோர் கொச்சியில் உள்ள தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே தொடர்ந்து வசித்து வந்தனர். பல ஆண்டுகளாக படுக்கையில் இருக்கும் தந்தைக்கு வீட்டிலேயே மருத்துவமனை போன்ற வசதிகள் ஏற்படுத்தி நன்றாக கவனித்து வருகிறார் நயன்தாரா. நேரம் கிடைக்கும்போதெல்லாம், நயன்தாரா தனது தாய், தந்தையை சந்திக்க கேரளா சென்று விடுகிறார்.
அவரின் பெற்றோருக்கு திருவல்லாவில் பூர்வீக வீடு உள்ளது. அந்த வீட்டை விற்றுவிடலாம் என நயன்தாராவின் அண்ணன் பெற்றோருக்கு ஆலோசனை கூறியிருக்கிறாராம். இதற்கான பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளாராம். சகோதரர், துபாயில் ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது செல்லமாக இருக்கும் நயன்தாரா, அண்ணனின் முயற்சிக்கு உதவியாக இருக்கிறாராம்.

Share this story