"நான் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் பணியாற்றி இருக்கிறேன்"-நயன்தாரா பேச்சு
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள பான் வேர்ல்ட் படம் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன் அப்ஸ்’. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா ஆகிய 5 முன்னணி நடிகைகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கே.வி.என். புரொடக்ஷன்ஸ், மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்ப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூரில் நடந்தது.
இதில் கலந்துகொண்ட நயன்தாரா, ‘பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று எந்த எண்ணமும் எனக்கு இல்லை. அது எனக்கு சரியாக வராது என்பதால் தான் அதிலிருந்து விலகி இருக்கிறேன். ஆனால், இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானது. அதற்கு முக்கிய காரணம் யஷ் தான். அவரது ஒரு போன் கால், நான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள போதுமானதாக இருந்தது.
20 வருடங்களுக்கு முன்பு நானும், கீது மோகன்தாஸும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தோம். அப்போது இருந்த கீது வேறு. அவர் என்னிடம் ‘டாக்ஸிக்’ கதையை விவரித்த அந்த நொடியிலிருந்து, ‘யார் இந்த பெண்? நாம் இதுவரை பார்த்திராத ஒரு இயக்குனராக இருக்கிறாரே’ என்று வியந்தேன். நான் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அனைவரும் சிறந்தவர்கள் தான்.

