கணவருடன் இணைந்து மீண்டும் புது தொழிலை துவங்கிய லேடி சூப்பர் ஸ்டார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கோலிவுட்டை கடந்து ‘ஜவான்’ படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். இப்படி நடிப்பில் ஒரு பக்கம் வளரும் நயன், தனது பிசினஸ்ஸிலுன் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.
முதலில் தனது கணவரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘ரௌடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பட தயாரிப்பில் இறங்கினார். தொடர்ந்து சாய் வாலே என்ற டீ நிறுவனத்தை தொடங்கினார். அடுத்ததாக கெமிக்கல் ஃப்ரி லிப் பாம் தயாரித்து அழகுசாதனை பொருட்கள் தயாரிக்கும் துறைக்குள் நுழைந்தார். ‘லிப்பாம்’ கம்பெனி நன்கு பிக்கப் ஆனதை தொடர்ந்து தற்போது ‘9ஸ்கின்’ என்ற பெயரில் ஸ்கின் கேர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை துவங்க உள்ளார். வரும் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அந்திறுவனத்தை துவங்க உள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் நயன்தாரா புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.