அடுத்தடுத்து புதிய நிறுவனங்களை தொடங்கும் நயன்தாரா

அடுத்தடுத்து புதிய நிறுவனங்களை தொடங்கும் நயன்தாரா 

பிரபல நடிகை நயன்தாரா புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

அடுத்தடுத்து புதிய நிறுவனங்களை தொடங்கும் நயன்தாரா 

சினிமாவில் வளர்ச்சி அடைந்த நடிகைகள் அதையடுத்து தங்களுக்கென்று நிறுவனம் ஒன்றைத் துவங்கி தொழிலில் இறங்குவது வழக்கம். அந்த வகையில் பெரும்பாலான நடிகைகள் அழகு சாதனப்பொருட்கள் நிறுவனத்தை நிறுவி வருகின்றனர். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கூட இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் நிறுவனம் ஒன்றை அறிவித்தார்.அந்த வகையில், நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘9 ஸ்கின்’ எனும் பெரில் ஸ்கின் கேர் நிறுவனத்தை தொடங்கினார். இந்த ஸ்கின் கேர் பிசினஸ் செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கப்பட்டது. நயன்தாரா தொடங்கியுள்ள இந்த புதிய பிசினஸுக்கு திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்களும் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இது தவிர ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம், சாய் வாலா, லிப் பாம் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

அடுத்தடுத்து புதிய நிறுவனங்களை தொடங்கும் நயன்தாரா 

இந்நிலையில், பெண்களுக்கான நாப்கின்களை உற்பத்தி செய்யும் ஃபெமி9 என்ற புதிய நிறுவனத்தையும் அவர் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மிகுந்த மன மகிழ்ச்சியோடு இந்த புதிய பயணத்தை தொடங்குவதாக பதிவிட்டிருந்தார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story