கொடி பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா

கொடி பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வந்தார்‌. அந்த வகையில் சமீபகாலமாக வெளியான திரைப்படங்கள் வரவேற்பை பெறாத நிலையில் மீண்டும் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது ஷாருக்கானுடன் 'ஜவான்', ஜெயம் ரவியுடன் 'இறைவன்' ஆகிய படங்களை முடித்துள்ள அவர், தனது 75வது படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கொடி பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா

இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் அண்மையில் வௌியானது. இந்நிலையில், பட்டாசு, கொடி, காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாரா புதிய படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
 

Share this story