மம்மூட்டி உடன் இணைந்த நடிகை நயன்தாரா...!

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆவார் மகேஷ் நாராயணன். இவர் இயக்கத்தில் வெளிவந்த டேக் ஆஃப், மாலிக் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றது. ஃபகத் ஃபாசில் நடித்த மாலிக் திரைப்படம் மலையாள சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம் என கூறலாம்.
மகேஷ் நாராயணன் அடுத்ததாக மம்மூட்டி நடிப்பில் தற்காலிகமாக MMMN என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இலங்கை, துபாய், கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இப்படத்தில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் ஃபகத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், தர்ஷனா ராஜேந்திரன், ரேவதி, சரின் ஷிஹாப், ராஜிவ் மேனன், ரெஞி பானிக்கர், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார்.
Nayanthara and @mammukka from the Sets of #AJFC_MMMN !!#Mammootty #Nayanthara #MammoottyKampany #AntoJosephFilmCompany #MaheshNarayanan pic.twitter.com/vloqeXBtmo
— MammoottyKampany (@MKampanyOffl) February 9, 2025
இப்படத்தை ஆண்டோ ஜோசப் தயாரித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார். நயன் தாரா மற்றும் மம்மூட்டி இதற்கு முன் தஸ்கரா வீரன், ராப்பகல், பாஸ்கர் தி ராஸ்கல் மற்றும் புதிய நியமம் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.