மலேசிய கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்

மலேசிய கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்

மலேசியா சென்றுள்ள நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி அங்குள்ள கோயில் ஒன்றில் சாமி தரிசனம் செய்தனர். 

அண்மையில் நயன்தாரா நடிப்பில் ஜவான் மற்றும் இறைவன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. நடிப்பு மட்டுமன்றி வேறு சில தொழில்களிலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடக்கத்தில் ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பல படங்களை தயாரித்து வெளியிட்டனர். அதை தொடர்ந்து, லிப் பாம் கம்பெனி, சாய் வாலே ஆகிய தொழில்களிலும் முதலீடு செய்தனர். இந்நிலையில், அவர்களின் இரட்டை மகன்களின் பிறந்தநாளை ஒட்டி 9ஸ்கின் என்ற பெயரில் புதிய நிறுவனத்தையும் தொடங்கியிருக்கின்றனர். 

மலேசிய கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்

இந்நிறுவனத்தை தொடங்கும் விதமாக மலேசியா சென்ற நயன்தாரா -  விக்னேஷ் சிவன் தம்பதி அங்குள்ள கோயில் ஒன்றில் சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 
 

Share this story