நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தயாரிப்பில் ஜல்லிக்கட்டு ஆவணப்படம்
1705571685881

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது தங்களது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் வரிசையாக படங்களை தயாரித்து வருகின்றனர். தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை தயாரித்து வருகின்றனர். கூழாங்கல் என்ற படத்தை தயாரித்து அந்த படம் பல சர்வதேச விருதுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கவின் நடிக்கும் குருவி என்ற படத்தை தயாரிப்பதாக அண்மையில் அறிவித்தது.
இவர்கள் தற்போது ஜல்லிக்கட்டு போட்டியின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் விளக்கும் விதமாக ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர். இது தொடர்பாக டீசர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்துள்ளது.