ட்ரெண்டாகும் ‘நயன்- விக்கி’யின் நீச்சல்குள புகைப்படம்.

photo

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா-விக்னேஷ் சிவன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அது தற்போது வைரலாகி வருகிறது. லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

photo

இந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளனர். அவர்களுக்கு உயிர், உலகம் என பெயரிட்டுள்ளனர். பண்டிகை நாட்கள், விசேஷ நாட்களில் தங்களது குழந்தைகளுடன் சேர்ந்து குடும்ப புகைப்படம் எடுத்து சமூலவலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட நயன் தந்து அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கை துவங்கினார். இப்படி குடும்ப வாழ்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் நயன்-விக்கி, தொழிலிலும் சோபித்து வருகின்றனர்.

photo

அந்த வகையில் பாலிவுட்டில் நயன் நடித்தஜவான்வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அதேப்போல தனியாகவும் தொழில் செய்து வருகின்றனர் இந்த தம்பதி. முதலில் நயன் தனது கணவரான விக்னேஷ் சிவனுடன் இணைந்துரௌடி பிக்சர்ஸ்என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பட தயாரிப்பில் இறங்கினார். தொடர்ந்து சாய் வாலே என்ற டீ நிறுவனத்தை தொடங்கினார். அடுத்ததாக கெமிக்கல் ஃப்ரி லிப் பாம் தயாரித்து அழகுசாதனை பொருட்கள் தயாரிக்கும் துறைக்குள் நுழைந்தார். ‘லிப்பாம்கம்பெனி நன்கு பிக்கப் ஆனதை தொடர்ந்து தற்போது ‘9ஸ்கின்என்ற பெயரில் ஸ்கின் கேர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை துவங்க உள்ளார்இதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வந்தது, தற்போது அதற்கான விளம்பர ஷூட்டிங் நடந்துள்ளது. இதனை விக்கி இயக்குகிறார். அதாற்காக இருவரும் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

Share this story