“எல்லாமே நீங்கள் தான்….”-சினி உலகில் 20ஆண்டுகளை நிறைவு செய்த 'நயன்தாரா' நெகிழ்ச்சி!....

photo

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, சினிமாவுக்குள் வந்து 20ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து, ரசிகர்களுக்காக நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.  

photo

சரத்குமாரின் ‘ஐயா’ படம் மூலமாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமான நயன், தனது தொடர் கடின உழைப்பால் இன்று 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினி வாழ்க்கை, தனிப்பட்ட வாழக்கை என இரண்டிலும் பல விமர்சனங்கள், எதிர்மறை கருத்துகளை சந்தித்தாலும் இன்று தனக்கான ஒரு குடும்பம், குழந்தைகள், பிசினஸ் என ஒரு சிறு உலகை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் 20 ஆண்டுகால  சினிமா வாழ்வு குறித்து பதிவிட்டுள்ளார்.

photo

அவர் கூறியதாவது “ இது எல்லாமே என ரசிகர்களாகிய உங்களுக்கானது. 20 ஆண்டுகளுக்கு பிறகு நான் இங்கு நிற்க நீங்கள் தான் காரணம் . எனது உந்து சக்தியாகவும், சினிமா வாழ்க்கையின் இதயத்துடிப்பாகவும் இருந்தீர்கள். எனது அருகில் மற்றும் தொலைவில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. திட்டங்களை படமாக மாற்றியது நீங்கள் தான், இராண்டு தசாப்தங்களாக சினிமாவில் உருவான நம்பமுடியாத, ஆதரவான, ஊக்கமளிக்கும் சக்தியை நான் கொண்டாடுகிறேன். அன்பு. எப்பொழுதும் மற்றும் எப்பொழுதும்,உங்கள் உண்மையுள்ள –நயன்தாரா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Share this story