ரசிகர்கள் முகத்தை விரும்புவதில்லை; சர்வதேச பத்திரிகைக்கு நயன்தாரா பேட்டி
நடிகை நயன்தாரா, அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதுடன், ஆயிரம் கோடிக்கு வசூலித்து சாதனையும் படைத்தது.
மேலும், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நயன்தாராவுக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ’பைஜு பாவ்ரா’ படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சினிமா துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் நயன்தாரா அண்மையில் எல்லி என்ற சர்வதேச பத்திரிகை ஒன்றுடனான நேர்காணலில் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில், ரசிகர்கள், நடிகர்களின் முகத்தை பார்த்து மதிப்பிடுவதில்லை. பதிலாக முக்கியமான கதாபாத்திரங்களில் அவர்கள் நடிப்பதையே விரும்புகிறார்கள் என நயன்தாரா தெரிவித்துள்ளார். மேலும், அப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
#ELLEDigitalCoverStar: Go behind the scenes with our digital cover star @NayantharaU on the sets of our shoot. pic.twitter.com/8kZss4EW6U
— ELLE India (@ELLEINDIA) October 11, 2023