நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி திரைப்படம்....

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி திரைப்படம்....

யூடியூபர் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்திற்கு மண்ணாங்கட்டி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நயன்தாராவுடன் இணைந்து, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசை அமைக்க உள்ளார்.

மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 .... யூடியூபர் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம்...  யூடியூபர் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்திற்கு மண்ணாங்கட்டி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.   படத்தில் நயன்தாராவுடன் இணைந்து, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசை அமைக்க உள்ளார்.  இந்நிலையில், திரைப்படத்திற்கு மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், மோசன் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரைப்படத்திற்கு மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், மோசன் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Share this story