குழந்தைகளுடன் முதல் ஓணம் கொண்டாடிய நயன்-விக்கி தம்பதி- கலக்கல் கிளிக்ஸ்.

photo

கோலிவுட்டின் ஸ்டார் தம்பதிகளாக வலம்வரும் நயன்-விக்கி தம்பதி தங்களது இரட்டை குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

photo

லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம்  திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து. இந்த தம்பதி திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆனதை அறிவித்தனர். இந்த தகவலால் பல சர்சைகள் பூதாகரமாக கிளம்பியது. தொடர்ந்து வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றதை அறிவித்து  சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

photo

தொடர்ந்து குழந்தைகளின் முகத்தை காட்டாமல் அவர்களின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். கிறிஸ்துமஸ், பொங்கல்,வருடபிறப்பு என பல விசேஷ நாட்களில் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வந்த நயன்-விக்கி தம்பதி தற்போது ஓணம் பண்டிகையை விமர்சையா கொண்டாடி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில் நயன், விக்கி, அவர்களின் இரண்டு குழந்தைகள் வேட்டி அணிந்து ஓணம் ஸ்பெஷல் உணவை சாப்பிடுகின்றனர். இந்த படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

photo

Share this story