முதல் முறையாக சூர்யாவிற்கு ஜோடியாகும் நஸ்ரியா?

முதல் முறையாக சூர்யாவிற்கு ஜோடியாகும் நஸ்ரியா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தனது 43வது படத்தில் நடிக்க உள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ஷங்கர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில்,  தற்போது கதாநாயகியாக நஸ்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் முறையாக சூர்யாவிற்கு ஜோடியாகும் நஸ்ரியா?

தமிழில் 'நேரம், ராஜா ராணி' போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்த பின் சினிமாவை விட்டு விலகினார். சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் நஸ்ரியா படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் இந்த படம் உறுதியாகும் பட்சத்தில் தமிழில் இவரின் ரீ-என்ட்ரி படமாக இது அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Share this story