'என்.பி.கே 109' வது படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ்...!

NBK 109

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா.இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது அவரது 109-வது படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக 'என்.பி.கே 109' என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்குகிறார். எஸ் தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.


சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இதில், பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'டாகு மகாராஜ்' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Share this story