குடும்பங்கள் கொண்டாடும் அயலான்

குடும்பங்கள் கொண்டாடும் அயலான்

டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி உள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.  ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. 

குடும்பங்கள் கொண்டாடும் அயலான்

இந்நிலையில், குடும்பம் குடும்பாக சென்று அயலான் திரைப்படத்தை அனைவரும் கண்டு ரசிக்கின்றனர். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளதாகவும், படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் நேர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். 

Share this story